தனியார் கல்லூரியில் ரத்ததான முகாம்

விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு ஆதி பவுண்டேஷன் சார்பில் மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம், மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
ஆதி பவுண்டேஷன் சார்பில் இண்டூர் நத்தஅள்ளி பகுதியில் அமைந்துள்ள மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகமானது சேவா பாரதி தமிழ்நாடு, மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம், அக்னி சிறகுகள் அறக்கட்டளை, உதவும் உள்ளங்கள், விஜய் மக்கள் இயக்கம் நல்லம்பள்ளி (மேற்கு) தருமம் அறக்கட்டளை தர்மபுரி, இணைந்த கரங்கள் தர்மபுரி, சேலம் சிவராம் ஜி இரத்த வங்கி இணைந்து நடத்தும் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு 16 ம் ஆண்டு இரத்ததான முகாம் மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி பள்ளப்பட்டியில் நடைபெற்றது. இந்த முகாமினை இண்டூர், காவல் ஆய்வாளர் சரவணன் தலைமை தாங்கி இரத்ததான முகாமினை தொடங்கி வைத்தார். முன்னிலையாக கா கோவிந்த் மருதம் நெல்லி கல்வி நிறுவனங்களின் தலைவரும் , ,ஆதி பவுண்டேஷன் இயக்குனருமான ஆதிமூலம், கல்லூரியின் முதல்வர் நா. மகேந்திரன் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். 97க்கும் மேற்பட்ட மாணவர்கள் இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். இரத்த தானம் செய்த அனைவருக்கும் மரக்கன்றுகள் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டப்பட்டது.
Next Story