சென்டர் மீடியனில் மோதி மினிவேன் கவிழ்ந்தது
Vellore King 24x7 |22 Dec 2024 10:55 AM GMT
வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலையம் அருகே சென்டர் மீடியனில் மோதி மினிவேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேலூரை சேர்ந்தவர் கலைசெல்வன் (வயது 38). இவர் வேலூரில் இருந்து ராணிப்பேட்டைக்கு டிரான்ஸ்பார்மரில் பொருத்தப்படும் கருவியை எடுத்துக்கொண்டு மினிவேனை காலை ஓட்டிச் சென்றார். சத்துவாச்சாரி காவல் நிலையம் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிவேன் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சென்டர் மீடியனில் எதிர்பாராத விதமாக மோதி கவிழ்ந்தது. அப்போது டீசல் சாலையில் கொட்டியது. விபத்தை பார்த்த பொது மக்கள் ஓடிச் சென்று மினிவேனில் சிக்கி இருந்த கலைசெல்வன் மற்றும் கிளீனர் ஆகியோரை மீட்டனர். இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து ஆசுவாசப்படுத்தினர். அவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருந்தது.இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சத்துவாச்சாரி போலீசார் விரைந்து சென்றனர். மேலும் அவர்கள் கவிழ்ந்து கிடந்த மினிவேனை கிரேன் உதவியோடு அப்புறப்படுத்தினர். மேலும் அவர்கள் போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்தினர். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்டர் மீடியனில் மினிவேன் மோதி கவிழ்ந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story