எட்டிவாடியில் முதலாம் ஆண்டு கன்றுவிடும் திருவிழா.

எட்டிவாடியில் முதலாம் ஆண்டு கன்றுவிடும் திருவிழா.
நூற்றுக்கணக்கான கன்றுகள் பங்கேற்று ஓடின.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த எட்டிவாடி கிராமத்தில் புத்தாண்டை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் முதலாம் ஆண்டு மாபெரும் கன்று விடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கன்று விடும் திருவிழாவை முன்னிட்டு போளூர், ஜமுனாமரத்தூர், எட்டிவாடி, களம்பூர், வேலூர், ஆலங்காயம், கிருஷ்ணகிரி, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து சுமார் நூற்றுக்கணக்கான கன்றுகள் பங்கேற்று ஓடின குறிப்பிட்ட தூரத்தில் இலக்கை அடைந்த கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன இதில் முதலாவது பரிசாக இருசக்கர வாகனமும் இரண்டாம் பரிசாக எக்ஸெல் இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. கன்று விடும் திருவிழாவை காண சுற்று வட்டார பகுதிகளான போளூர், களம்பூர், ஆரணி, எட்டிவாடி, வடமாதிமங்கலம், கஸ்தம்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு கண்டுகளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story