நாமக்கல்: பெரியூர் மருதகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக ஆலோசனை மகாசபை கூட்டம்!
Namakkal King 24x7 |22 Dec 2024 12:05 PM GMT
திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் குறித்து ஆலோசனை /மகாசபை கூட்டம், கோவில் நிர்வாகக்குழு தலைவரும், பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவருமான கே.சந்திரமோகன் தலைமையில் நடைபெற்றது.
நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட தும்மங்குறிச்சி பெரியூரில் மருதகாளியம்மன்கோவில் அமைந்துள்ளது. கொங்குவேளாளர் சமூகத்தின் பண்ணை குலம் மற்றும் தூரன் குலத்தாருக்கு பாத்தியப்பட்ட மருத காளியம்மன் கோவில் உள்ளது.பிரசித்திபெற்ற இக்கோவிலில்,விநாயகர்,மதுரகாளியம்மன் சுவாமி கர்ப்ப கிரகம், முன்மண்டபம், நிலை கோபுரம், ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கான கோவில்கள் புதிதாக கட்டப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் குறித்து ஆலோசனை செய்வதற்காக,குடிப்பாட்டுக்காரர்களின் மகாசபை கூட்டம் (டிசம்பர் -22) ஞாயிற்றுக்கிழமை கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.கோவில் நிர்வாகக்குழு தலைவரும், பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவருமான கே.சந்திரமோகன் தலைமை தாங்கினார்.இதில் திருப்பணிகள் நிறைவுற்று அடுத்தாண்டு (2025) பிப்ரவரி 2-ம் தேதி (தை 20 நாள்) ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. எனவே கும்பாபிஷேகம் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற குழுக்கள் அமைத்து பணியாற்ற ஆலோசனைகளை வழங்கினார்.இந்த மகாசபை கூட்டத்தில் அறங்காவலர்கள் க.திருநாவுக்கரசு, எஸ்.கே.பழனிவேலு, பி.கே.ராமசாமி, எல்.குமாரசாமி திருப்பணி குழு தலைவர் எம்.பாலசுப்ரமணியன் மற்றும் குழு உறுப்பினர்கள், இளைஞர் நற்பணி மன்றத்தார் மற்றும் பண்ணை குலம் தூரன் குலம் குடிப்பாட்டு மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story