ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோவில் வழிப்பாதையில் மின்விளக்குகள் பொருத்தம்
Chengalpattu King 24x7 |22 Dec 2024 12:10 PM GMT
ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோவில் வழிப்பாதையில் மின்விளக்குகள் பொருத்தம்
செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி பேரூராட்சிக்கு உட்பட்ட மலைப்பாளையம் மலைப்பகுதியில் ஸ்ரீ ரங்கநாத சுவாமி திருக்கோவில் உள்ளது.இந்த கோவிலுக்கு பொதுமக்கள் மலைப்பாதை வழியாகவும் படி வழியாகவும் ஏரி சாமி தரிசனம் செய்வது வழக்கம்.இந்த நிலையில் இந்த ஸ்ரீரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு செல்லக்கூடிய மலைப்பாதை வழியில் மின்விளக்கு வசதி இல்லாமல் பக்தர்கள் பொதுமக்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வந்த நிலையில் தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி,இந்த ஸ்ரீ ரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு செல்லக்கூடிய மலை பாதையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மின்வாரியத்துறை அதிகாரி மூலம் புதிய கம்பங்கள் நடப்பட்டு மின் விளக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டுள்ளது.. இதனை பேரூராட்சி மன்ற தலைவர் தசரதன் கலந்து கொண்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
Next Story