மீன் தொழிலாளர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம்

மீன் தொழிலாளர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம்
கிள்ளியூரில்
குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் சார்பில் மீனவர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற  வலியுறுத்தி கையெழுத்து இயக்க நிகழ்ச்சி கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட நீரோடியில் நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு முஞ்சிறை ஒன்றிய தலைவர் பிராங்கிளின் தலைமை வகித்தார். செயலாளர் எஸ்கலின் ஒன்றிய செயலாளர் விமல் ராஜ் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர். இந்த கையெழுத்து இயக்கம் நீரோடியிலிருந்து துவங்கி இன்று (22-ம் தேதி)  குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவ கிராமங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Next Story