கட்டுமான உடல் உழைப்பு தொழிலாளர் நல மத்திய ஐக்கிய சங்கம் சார்பாக மாநில பொதுக்குழு கூட்டம்
Chengalpattu King 24x7 |22 Dec 2024 12:12 PM GMT
கட்டுமான உடல் உழைப்பு தொழிலாளர் நல மத்திய ஐக்கிய சங்கம் சார்பாக மாநில பொதுக்குழு கூட்டம்
மதுராந்தகத்தில் தமிழ்நாடு கட்டுமான உடல் உழைப்பு தொழிலாளர் நல மத்திய ஐக்கிய சங்கம் சார்பாக மாநில பொதுக்குழு கூட்டம். செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகத்தில் தமிழ்நாடு கட்டுமான உடல் உழைப்பு தொழிலாளர் நல மத்திய ஐக்கிய சங்கம் சார்பாக மாநில பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் வி .ஜே. குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணகுமார், சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் தேசிங் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் மழைக்கால நிவாரணம் பதிவு செய்யப்பட்ட கட்டுமான தொழிலாளர் அனைவருக்கும் நிவாரண நிதியாக 8 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். திருமண உதவித்தொகை விண்ணப்பித்திருந்த மனுக்களை குறிப்பிட்ட காலத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டும் உள்ளிட்ட இருவதற்கு மேற்பட்ட தீர்மானங்கள் இந்த மாநில பொதுக்குழு கூட்டத்தின் மூலம் மத்திய மாநில அரசுகளுக்கு எடுத்துரைக்கும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ராஜசேகர், மாநில பொருளாளர் ஜான் விஜயகுமார், மாநில பொதுக்குழு தலைவர் அர்ச்சுணன், மாநில துணைத்தலைவர் கண்ணன், மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் பழனி ஆச்சாரி, அய்யனாரப்பன் உள்ளிட்ட தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து சங்க நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர்.
Next Story