பெரிய காளிபாளையத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

பெரிய காளிபாளையத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
பெரிய காளிபாளையத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. கரூர் அடுத்த பெரிய காளிபாளையம் பகுதியில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பல்வேறு மருத்துவமனைகள் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஸ்ரீ ரத்னா மருத்துவமனை, சங்கர் கண் மருத்துவமனை, அனன்யா ஆர்த்தோ கேர் மருத்துவமனை, சஞ்சய் ரித்திக் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகள் சார்பாக முகாம்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பல்வேறு பரிசோதனை, சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. முகாமின் சிறப்பம்சங்களாக, மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோ பிளாஸ்டி இலவசமாக செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதேபோல 2500 மதிப்புள்ள இசிஜி, எக்கோ மற்றும் ரத்த பரிசோதனைகளுக்கு கட்டணம் ரூபாய் 499 எனவும், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் நோய் கண்டறிதலுக்கு 50% ஆப்பர் மூலம் பார்க்கப்படும் எனவும், முகாமில் பங்கேற்கும் நபர்களுக்கு சுகப்பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சைக்கு 25 % ஆப்பர் வழங்கப்படும் எனவும், மூட்டு வலி, கை,கால் கழுத்து மற்றும் முதுகு வலி போன்றவைகளுக்கு ஆலோசனை வழங்கப்படும் எனவும், பிபி, பல்ஸ் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு, கண்ணில் உள்வழி லென்ஸ் பவர் கண்டறிதல், மேலும், முகாமில் தேவைப்படும் நபருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த முகாமில் மருத்துவர்கள் சுசில் குமார், திவ்யா சுசில், ராஜேந்திரன், நித்திய குமார், கிருத்திகா உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பொது மக்களுக்கு பல்வேறு பரிசோதனைகளையும் சிகிச்சையும் வழங்கினார்.
Next Story