தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டம்.
Thiruvarur King 24x7 |22 Dec 2024 12:33 PM GMT
திருவாரூரில் நடைபெற்ற தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில பொது குழு பணி நிறைவு பதவி உயர்வு பாராட்டு விழா திருவாரூர் நகர் பகுதியில் தனியார் திருமண அரங்கில் இன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், திருவாரூர் ஒன்றிய குழு தலைவர் புலிவலம் A.தேவா உள்ளிட்ட கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநில பொதுக்குழுவில் முக்கிய தீர்மானமாக திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Next Story