விருதளிப்பு விழா

விருதளிப்பு விழா
தமுஎகச சார்பில் கலை இலக்கிய விருதளிப்பு விழா
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில், 2023ம் ஆண்டிற்குரிய கலை இலக்கிய விருதளிப்பு விழா நேற்று, ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாநில தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் ராமலிங்கம் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, மாநில துணைப்பொதுச்செயலாளர் லட்சுமி காந்தன், மாவட்ட தலைவர் சங்கரன், மாவட்ட செயலாளர் கலைக்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இலக்கியங்கள், கலை, குறும்படங்கள், ஆவணப்படங்கள் உள்ளிட்டவைகளில் சிறந்த பங்களிப்பாற்றிய, எழுத்தாளர்கள் ஜெயகிருஷ்ணன், தேவி, ஜூலியஸ், செங்கோடி, ப்ரியா, அமுதா செல்வி, ஜோதி விஜேந்திரன், குறும்பட இயக்குனர் மீனாட்சி சுந்தர், ஆவணப்பட இயக்குனர் சஞ்சய் ரித்வான் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டன.
Next Story