வடமதுரை: போலீசார் தீவிர வாகன சோதனை
Dindigul King 24x7 |22 Dec 2024 1:10 PM GMT
வடமதுரையில் போலீசார் தீவிர வாகன சோதனை
திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பிரதீப் உத்தரவின் பேரில் வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலீசார் வடமதுரையில் தென்னம்பட்டி - எரியோடு பிரிவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாகன சோதனையின் போது இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஆவணங்கள் சரியாக உள்ளதா? என்றும் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வரும் நபர்களிடம் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரிக்கை செய்தார். வடமதுரையில் ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலீசார் தொடர்ந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதை அப்பகுதி மக்கள் நன்றி பாராட்டினர்.
Next Story