இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணம் திருட்டு
Virudhunagar King 24x7 |22 Dec 2024 1:14 PM GMT
இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணம் திருட்டு
சாத்தூர் சத்யா ஏஜென்சி பகுதியில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணம் திருட்டு விருதுநகர் மாவட்டம் மேட்டமலை பகுதியை சார்ந்தவர் பழனிச்சாமி வயது 60 இவர் சாத்தூர் இந்தியன் வங்கியில் தனது வங்கிக் கணக்கில் இருந்த ஒரு லட்சத்து 80 ஆயிரத்தை எடுத்து அதில் தான் அடகு வைத்திருந்த நகைக்கு 36 ஆயிரத்து வங்கியில் செலுத்தி விட்டு மீதமுள்ள ஒரு லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மற்றும் இந்தியன் பேங்க் அக்கவுண்ட் புக் உழவர் அட்டை பான் கார்டு ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை தனது இருசக்கர வாகனத்தில் முன்பக்க பவுச்சில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது அதைத்தொடர்ந்து சத்யா ஏஜென்சி அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு சிறுநீர் கழித்து விட்டு இரு சக்கர வாகனத்தை பார்த்த பொழுது அதில் இருந்த பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் இதை அடுத்து தனது காணாமல் போன பணம் அக்கவுண்ட் பாஸ்புக் உழவர் அட்டை பான் கார்டு ஆதார் கார்டு கொண்டாட்டத்தை கண்டுபிடித்து தர கூறி சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் சாத்தூர் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story