ஊராட்சிப் பகுதி அமைப்புக்குழு அறிமுக கூட்டம் நடந்தது

ஊராட்சிப் பகுதி அமைப்புக்குழு அறிமுக கூட்டம் நடந்தது
பல்வேறு நாடக மன்றங்களை சேர்ந்தவர்கள் தமுஎகச சங்கத்தில் தங்களை நினைத்துக் கொண்டனர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள பள்ளிக்காடு பகுதியில் ஸ்ரீ கண்ணப்ப நாயனார் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் தட்டாங்குட்டை ஊராட்சி பகுதி அமைப்புக்குழு அறிமுக கூட்டமானது ஞாயிறன்று நடைபெற்றது... இந்த கூட்டத்திற்கு எம்.ஆர்.கொய்யா மணி தலைமை தாங்கினார். அமைப்பாளர் ஆர்.தியாகராஜன் வரவேற்புரை ஆற்றினார். இதில் தமுஎகச மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா சிறப்புரையாற்றினார் . தமுஎகச மாவட்ட செயலாளர் சேகரன், மாவட்ட தலைவர் காந்தி சரவணன், வெப்படை கிளை தலைவர் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . இதில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்து பேசப்பட்டது. இதில் குமாரபாளையத்தில் பல்வேறு ஆண்டுகளாக இயங்கும் ஸ்ரீ விநாயகா கலா மன்றம் , செங்கவேல் கலா மன்றம் சங்கம் , ஸ்ரீ ராஜகணபதி சர்வசக்தி மாரியம்மன் நாடக மன்றம். . ஸ்ரீ கண்ணப்பர் கலா மன்றம் , ஸ்ரீ எல்லை மாரியம்மன் நாடக மன்றம், ஸ்ரீ மாரியம்மன் நாடக மன்றம் உள்ளிட்ட ஆறு மன்றங்களை சேர்ந்தவர்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். புதிதாக இணைந்தவர்களுக்கு மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா சால்வை அணிவித்து வரவேற்றார் . இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர்...
Next Story