பஞ்சாலை சங்க கூட்டம் நடைபெற்றது

பஞ்சாலை சங்க கூட்டம் நடைபெற்றது
பஞ்சாலை சங்க மாவட்ட மகாசபை கூட்டம் நடந்தது
நாமக்கல் மாவட்ட பஞ்சாலை தொழிலாளர் சங்க மகாசபை கூட்டம் வெப்படை தனியார் மண்டபத்தில் சங்க மாவட்டத் தலைவர் வெங்கடாச்சலம் தலைமையில் நடைபெற்றது.  அஞ்சலி தீர்மானத்தை . ராயப்பன் முன் மொழிந்தார். மாதேஸ்வரி வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்நாடு பஞ்சாலை சம்மேனன மாநிலத் தலைவர் M. சந்திரன் துவக்க உரையாற்றினார். மாவட்டச்செயலாளர் S.தனபால் அவர்கள் வேலையறிக்கையை முன் வைத்தார்.  . சிஐடியு மாவட்டத் தலைவர் M. அசோகன், தமிழ்நாடு பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில செயலாளர் V. மாணிக்கவாசகம்  வாழ்த்துரை வழங்கினார்கள்.  மகாசபை கூட்டத்தில் மாவட்ட தலைவராக R. வெங்கடாச்சலம்,  மாவட்டச் செயலாளராக S. தனபால்  பொருளாளராக P. வீரமுத்து மற்றும் உதவித் தலைவர்கள் உதவி செயலாளர்கள் என 10 நிர்வாக குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த கூட்டத்தில் குறைந்தபட்ச கூலி ரூ 544/- பஞ்சாயத்து தொழிலாளர்களுக்கு அமலாக்கப்பட வேண்டும், இஎஸ்ஐ, பி எப் உரிமைகள் வழங்கப்பட வேண்டும், சட்டப்படி பணி நிரந்தரம் ஆகியன உறுதி செய்யப்படுவதுடன் சம்பள பட்டியல் வழங்கப்பட வேண்டும். PF, ESI பிடித்தம் செய்யப்பட்ட தொழிலாளிகளுக்கு UAN எண் வழங்க வேண்டும்,  இ எஸ் ஐ படித்தம் செய்த தொழிலாளிகளுக்கு குடும்ப அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Next Story