பாலியல் தொந்தரவு கொடுத்தவர் போக்சோவில் கைது

பாலியல் தொந்தரவு கொடுத்தவர் போக்சோவில் கைது
சாணார்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ரவுடிக்கு தர்ம அடி, போலீசார் போக்சோவில் கைது செய்து விசாரணை
திண்டுக்கல் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மனோஜ்குமார்(27) என்பவரை அப்பகுதி மக்கள் தர்ம அடி கொடுத்தனர். காயம் அடைந்த மனோஜ்குமாருக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது மேற்படி சம்பவம் குறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மனோஜ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனோஜ்குமார் மீது சாணார்பட்டி, நத்தம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை மற்றும் ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story