கோவை: பொங்கல் விழா விமர்சை கொண்டாட்டம் !

கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், இந்த முன்கூட்டிய கொண்டாட்டம் மாணவர்களையும் பெற்றோரையும் ஒன்றிணைத்தது.இந்த விழாவில் கோவை மக்களவை தொகுதி உறுப்பினர் கணபதி ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். குமரகுரு சுவாமிகள் விழாவை துவக்கி வைத்தார். தமிழர்களின் பாரம்பரிய கலைகளை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான வள்ளிக்கும்மி நடனம், கம்பத்து ஆட்டம், ஜமாப் மலர் கம்பம் போன்ற விளையாட்டுகள் மற்றும் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன.அவர்களுடன் பெற்றோரும் இணைந்து நடனமாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர்.
Next Story