பொள்ளாச்சியில் ஐடி பார்க் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் !
Coimbatore King 24x7 |22 Dec 2024 2:05 PM GMT
பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை சார்பில் நம்ம ஊரு, நல்ல ஊரு என்ற தலைப்பில் நடைபெறும் 9 நாள் விழா.
பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை சார்பில் நம்ம ஊரு நல்ல ஊரு என்ற தலைப்பில் 9 நாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவின் துவக்க நிகழ்ச்சி நேற்று இரவு பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, விழாவை தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர், வரும் காலங்களில் தமிழகத்தில் முதன்மை சுற்றுலாத்தலமாக பொள்ளாச்சியை மாற்ற என்னென்ன திட்டங்கள் தேவையோ, அனைத்து திட்டங்களையும் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். மற்றும் பொள்ளாச்சியில் ஐடி பார்க் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்த அறிவிப்பு பொள்ளாச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Next Story