கட்டிலில் படுத்தபடி பீடி புகைத்த போது தீயில் கருகி முதியவர் பலி

கட்டிலில் படுத்தபடி பீடி புகைத்த போது தீயில் கருகி முதியவர் பலி ஊத்துக்குளி காவல்துறை விசாரணை
ஊத்துக்குளி தாலுகாவிற்கு உட்பட்ட செங்கப்பள்ளி ஊராட்சி பூசாரி பாளையம் பகுதியில் சேர்ந்தவர் சுப்பிரமணி இவர் கடந்த 5 வருடங்களாக நோய்வாய் பட்டு சரிவர நடக்க முடியாமல் அவரது வீட்டில் தனியே வசித்து வந்தார். புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான இவர் சம்பவத்தன்று இரவு நைலான் கட்டிலில் படுத்துக்கொண்டு பீடி குடிப்பதற்காக தீப்பெட்டியில் இருந்து தீக்குச்சியை எடுத்து உரசி பீடியை பற்ற வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது தீக்குச்சி கட்டில் உள்ள பெட் சீட்டில் விழுந்து தீப்பற்றியதோடு அவர் உடல் மீதும் எரிந்தது. பலத்த தீக்காயம் அடைந்த சுப்பிரமணியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். மேலும் சுப்ரமணியை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஊத்துக்குளி காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story