பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது : ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம்
Thanjavur King 24x7 |22 Dec 2024 2:28 PM GMT
கருத்தரங்கம்
தஞ்சாவூரில் பெசன்ட் அரங்கில், சனிக்கிழமையன்று ஓய்வூதியர் தின கருத்தரங்கம், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஓய்வூதியர் நல அமைப்பு ஆகியவற்றின் சார்பில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு ,ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் டி.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் எஸ்.பால்ராஜ் வரவேற்றார். ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கலியமூர்த்தி, மின்வாரிய ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் டி.மணிவண்ணன், ஓய்வூதியர் சங்கங்களின் நிர்வாகிகள் ஆர்.தமிழ்மணி, எஸ்.ஞானசேகரன், என்.பாஸ்கரன், ஆர்.ராஜகோபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். தமிழ்நாடு மின்வாரிய ஓய் பெற்றோர் நல அமைப்பு மாநில பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். நிறைவாக பொருளாளர் எஸ்.கோவிந்தராஜ் நன்றி கூறினார். "டாக்டர் அம்பேத்கரை அவமதித்து பாராளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதை கண்டித்தும், அனைவருக்கும் முறைப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியம் அமலாக்கப்பட வேண்டும். 70 வயதில் 10 விழுக்காடு கூடுதல் ஓய்வூதியம் வேண்டும். கம்முட்டேஷன் பிடித்தம் புத்தாண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும். சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.7,850 ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி டி.ஏ நிலுவை உள்ளிட்ட சலுகைகளை அமல்படுத்த வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது" என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story