வினாடி-வினா போட்டி

வினாடி-வினா போட்டி
ஈரோட்டில் நடந்த மாவட்ட அளவிலான திருக்குறள் வினாடி-வினா போட்டியில் 317 பேர் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு சார்பில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை முன்னிட்டு, அரசு ஊழியர்கள் மற்றும் அனைத்து வகையான பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு திருக்குறள் வினாடி-வினா போட்டி நடத்தப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்திற்கான போட்டி நேற்று ஈரோடு காந்திஜி சாலை அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், அனைத்து அரசு ஊழியர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. 500 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 317 பேர் மட்டுமே பங்கேற்றனர். 50 மதிப்பெண்களுக்கு விடை அளிக்க வேண்டும். ஸ்கிரைப் உதவியில் இருவர் தேர்வு எழுதினர். தேர்வை முதன்மை கல்வி அலுவலர் சுப்பா ராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இத்தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து வெற்றி பெறும் ஒன்பது பேர், வரும் 28ம் தேதி விருதுநகரில் நடக்கும் மாநில போட்டியில் பங்கேற்பர். தேர்வு ஏற்பாட்டை பள்ளி கல்வி துறையினர் செய்திருந்தனர்.
Next Story