பள்ளியில் சுத்திகரிப்பு குடிநீர் நிலையம்

பள்ளியில் சுத்திகரிப்பு குடிநீர் நிலையம்
பள்ளியில் சுத்திகரிப்பு குடிநீர் நிலையம்
கவரைப்பேட்டையில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 2.15 லட்சம் ரூபாய் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறக்கப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் திரிபுரசுந்தரி தலைமையில் நடந்த திறப்பு விழாவில், தொடக்க இடைநிலை மாவட்ட கல்வி அலுவலர் ரவி, வட்டார கல்வி அலுவலர்கள் சுதா, சிவகாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாவட்ட முதல்மை கல்வி அலுவலர் ரவிசந்திரன், சுத்தரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன
Next Story