குற்றச் செயல்களை தடுக்க காங்கேயத்தில் கண்காணிப்பு பணி தீவிரம்
Tiruppur King 24x7 |22 Dec 2024 2:42 PM GMT
காங்கேயம் பகுதியில் நடைபெறும் குற்றச்சாட்டுகளை தடுக்க கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது
பல்லடத்தில் கலர் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மூன்று பேர் கொலை சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் அவ்வப்போது நடைபெறும் குற்ற செயல்கள் வழிப்பறி கொள்ளை வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு ஆகியவற்றை தடுக்க திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தார் தற்போது அதிரடி நடவடிக்கை மற்றும் காங்கேயம் மற்றும் மற்ற பகுதிகளிலும் தனியாக உள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றார் இதன் ஒரு பகுதியாக அவரின் உத்தரவின் அடிப்படையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் உட்கோட்டம், காவல் துறை துணை காவல் கண்காணிப்பாளர் மாணவன் மேற்பார்வையில் காங்கேயம் காவலாளர் விவேகானந்தன் உதவி ஆய்வாளர் கார்த்திக் குமார் ஆகியோர் காங்கேயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர் அதன்படி இல்லியம்புதூரிலிருந்து அதன் வழியாக வரக்கூடிய பிஏபி வாய்க்கால் பாதையான திருப்பூர் சாலை வாய்க்கால் மேட்டு தொடங்கி சென்னிமலை சாலை வாய்க்கால் மேடு பாளையங்கோட்டை சாலை மற்றும் முத்தூட் சாலை கங்கா நகர் வழியாக செல்லக்கூடிய வாய்க்காலுக்கு அருகில் வயதான தம்பதிகள் குடியிருக்கும் வீடுகளை நன்கு ஆராய்ந்து அதன் அருகில் இரவு நேரத்தில் அந்நிய நபர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் அதனை தடுக்கவும் குற்றச் செயல்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர் மேலும் முக்கியமான இடங்களில் காவல்துறை சார்பில் இரும்பு தடுப்புகளை பாதுகாப்பு கருதி வைக்கப்பட்டுள்ளது மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தமும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றது
Next Story