கோர விபத்து கணவன் மனைவி பலி

கோர விபத்து கணவன் மனைவி பலி
நத்தம் அருகே கோர விபத்து கணவன் மனைவி பலி - காவல்துறை அலட்சியத்தால் ஒரு மணி நேரம் சாலையிலேயே கிடந்த உடல்
நத்தம் அருகே பாலப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 58) அவரது மனைவி சுமதி (வயது 56) இவர்கள் இருவரும் பாலமேட்டில் உள்ள உறவினர்களை சந்திக்க சென்று விட்டு மீண்டும் நத்தம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது கோமணம் பட்டி பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த ரஞ்சித் என்பவர் ஓட்டி வந்த கார் இருசக்கர வாகனம் இது பலமாக மோதியது இதில் கணவன் மனைவி இருவரும் தூக்கி சாலையில் வீசப்பட்டனர். இந்த கோர விபத்தில் ராஜேந்திரன் மனைவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க பலியானார் ராஜேந்திரன் பலத்த காயமடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து நடந்து ஒரு மணி நேரமாகியும் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வராததால் இறந்தவரின் உறவினர்கள் சாலையிலேயே உடலை வைத்து நீண்ட நேரம் காத்திருந்தனர். பின்னர் அவர்களுக்கு சொந்தமான காரில் இறந்தவர் உடனே தூக்கி வைத்தனர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆம்புலன்ஸ் வரவழைத்த பின்னர் அதில் ஏற்றி செல்லலாம் என கூறியதால் காரிலேயே உடலை வைத்து அரை மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்தனர் இதனால் இறந்தவரின் உறவினர்களுக்கும் காவல்துறையினருக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
Next Story