விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் கருத்தரங்கம்
Villuppuram King 24x7 |22 Dec 2024 4:02 PM GMT
தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் கருத்தரங்கம்
விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில், அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகத்தின் பன்னாட்டு கருந்தரங்கம் துவங்கியது.கருத்தரங்கை துவக்கி வைத்து, இ.எஸ்.கல்விக் குழுமங்களின் நிர்வாகத் தலைவர் செந்தில்குமார் பேசினார். கல்லுாரி முதல்வர் அகிலா வரவேற்றார். தமிழ்பனை, தமிழ்த்தினை எனும் ஆய்வு கோவைகளை, இ.எஸ். கல்வி குழுமத்தின் தாளாளர் சாமிக்கண்ணு வெளியிட்டார்.விழுப்புரம் எம்.பி., டாக்டர் ரவிக்குமார் சிறப்புரை ஆற்றினார். முனைவர் ரத்தின வேங்கடேசன், ஆட்சி மன்ற தலைவர் முனைவர் தாயம்மாள் அறவாணன் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர்.இதில், மொழி பெயர்ப்பு பயிற்றுநர் இலக்குவன், பேராசிரியர் சித்ரா, ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் பழனியாண்டி, சற்குணம், சிலம்பு செல்வராசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.இந்த பன்னாட்டு கருத்தரங்கு, நேற்று துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது. இதில், 500 க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
Next Story