விழுப்புரத்தில் ஆட்டோ மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரத்தில் ஆட்டோ மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரணை
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் மருத்துவா் தெருவைச் சோ்ந்த ராமானுஜம் மகன் செல்வராஜ் (55). தொழிலாளி. இவா், பணி நிமித்தமாக விழுப்புரத்துக்கு சென்றுவிட்டு, செஞ்சி நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம்.அப்போது, அயனம்பாளையம் பகுதியில் அவா் சாலையைக் கடக்க முயன்றபோது, ஆட்டோ மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Next Story