மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சமத்துவ நல்லுறவு கிறிஸ்துமஸ் விழா
Tiruchengode King 24x7 |23 Dec 2024 1:32 AM GMT
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சமத்துவ நல்லுறவு கிறிஸ்துமஸ் விழா
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் திருச்செங்கோடு புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ நல்லுறவு கிறிஸ்மஸ் பெருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சேலம் மறை மாவட்ட முன்னாள் ஆயர் சிங்கராயன் தலைமை வகித்தார்.தமிழக ஆயர் பேரவை தலைவரும்மத நல்லிணக்கம் மற்றும் பல் சமய உரையாடல் பணிக்குழுவைச் சேர்ந்த ஆயா லாரன்ஸ் பையர்ஸ் முன்னிலை வகித்தார் சிறப்பு விருந்தினராக திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ராஜயோக தியான மையப் பொறுப்பாளர் ஜெயந்தி நாமக்கல் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை மாவட்ட தலைவர் மவுலி முகம்மது அலி நாமக்கல் மறை மாவட்ட முதன்மை குரு மைக்கேல்ராஜ் செல்வம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்துவ மதகுருமார்கள் என மும்மதங்களைச் சேர்ந்தமத குருமார்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு மும்மதங்களைச் சேர்ந்தமத குருமார்களுடன் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பெருவிழாவை கொண்டாடினார். நகர் மன்ற உறுப்பினர்கள் ராஜா,செல்வி ராஜவேல்,புவனேஸ்வரி உலகநாதன் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.இந்த விழாவில் மும்மதங்களையும் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Next Story