பீமன் அருவியில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழப்பு.
Tiruvannamalai King 24x7 |23 Dec 2024 1:40 AM GMT
தீயணைப்புத் துறையினர் உடலை போராடி மீட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் தாமோதரன் 25 இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார் இவரது நண்பர் அதே ஊரைச் சேர்ந்த அரி நாத் (25) இருவரும் நேற்று ஜவ்வாது மலை ஜமுனாமரத்தூருக்கு பீமன் அருவியில் தடை செய்யப்பட்ட பகுதியில் குளித்துக் கொண்டிருந்தனர் அப்போது எதிர்பாராத விதமாக தாமோதரன் அருவி தண்ணீரில் மூழ்கி உள்ளார் உடனே உடன் வந்த நண்பர் பயந்து போய் அருவியின் மேல் பகுதிக்கு வந்து கூச்சல் போட்டார். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் ஜமுனாமரத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து உடலை ஒரு மணி நேரம் போராடி இறந்த நிலையில் இருந்த தாமோதரன் உடலை மீட்டு கரைத்துக் கொண்டு வந்தனர் இதுகுறித்து ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தாமோதரன் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Next Story