ராமநாதபுரம் விடுமுறை விடுமுறை தினத்தை ஒட்டி குவிந்த பக்தர்கள்
ராமநாதபுரம் ராமேஸ்வரம் உலக பிரசித்தி பெற்ற முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று என்பதால், வார விடுமுறை நாட்களில் ஆயிரகணக்கானோர் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அதிகளவு வருகை தருவது வழக்கம். இந்நிலையில் இன்று வார விடுமுறையையொட்டி நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் வந்தனர். ஐயப்ப பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம்; வைத்து பூஜை செய்த பின்னர் நீண்ட வரிசையில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் ராமேஸ்வரத்தை சுற்றியுள்ள தனுஷ்கோடி, ராமர் பாதம், கலாம் நினைவகம், பாம்பன் பாலம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். வழக்கத்தை விட அதிகமாக சுற்றுலாப் பயணிகள் ராமேஸ்வரம் வந்துள்ளதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. எனவே முக்கிய இடங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க சீருடை அணியாத காவலர்கள், காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story



