சாரதா வித்யாஷ்ரம் பள்ளி கூடுதல் திறன் விழா

சாரதா வித்யாஷ்ரம் பள்ளி கூடுதல் திறன் விழா
X
விழா
திருக்கோவிலூர் சாரதா வித்யாஷ்ரம் பள்ளியில் மாணவர்களுக்கான கூடுதல் திறன் விழா நடந்தது. சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் முன்னிலையில் நடந்த விழாவில் பள்ளியின் தலைவர் கார்த்திகேயன், தாளாளர் பிரபு தலைமை தாங்கினர்.கராத்தே, வில்வித்தை, சிலம்பம் போன்ற கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்று சாதனை புரிந்தனர். தொடர்ந்து வாய்ப்பாட்டு கலை மாமணிகள் சூசை ராஜ், அங்கப்பன், வயலின் சங்கீத கலா ரத்னா சரவணன் ஆகியோரின் இசை வாத்தியங்களோடு, மாணவர்களின் பரதநாட்டிய சலங்கை பூஜை அரங்கேற்றப்பட்டது. சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் சார்பாக அதன் நிறுவனர் நீலமேகம், பொது செயலாளர் ஆர்த்தி, மண்டல தலைவர் செல்வராஜ் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Next Story