சங்கரன்கோவிலில் போக்சோவில் தவெக கட்சி நிர்வாகி கைது: மாவட்ட தலைவர் விளக்கம்

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் அல்-அமீன் என்பவர் போக்சாவில் கைது செய்யப்பட்டார். இவர் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர் என செய்தி பரவியது. இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட அல்அமீன் கடந்த நவ.29 அன்றே கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக தமிழக வெற்றிக் கழக தென்காசி வடக்கு மாவட்ட தலைவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார். இதில் ஏராளமான தமிழக வெற்றி கழக கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

