குமரி :  பாஜக கவுன்சிலர் மீது எஸ் பி அலுவலகத்தில் புகார்

குமரி :  பாஜக கவுன்சிலர் மீது எஸ் பி அலுவலகத்தில் புகார்
X
கன்னியாகுமரி
கன்னியாகுமரி அருகே மயிலாடி வைகுண்டசாலை  தங்கசாமி மகன் மகேஷ் என்பவர்   புதூர் ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவில் நிர்வாகத்தினர் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்  அளித்த மனுவில்  கூறியிருப்பதாவது:-          கன்னியாகுமரி, மயிலாடி பேரூராட்சி மன்ற பாஜக கவுன்சிலர் சுதா கணேசன் மற்றும் அகஸ்தீஸ்வரம்  ஒன்றிய பாஜக துணைத் தலைவர் சிவா கணேசன் ஆகியோர்  என்மீதும் மயிலாடி புதூர் ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவில் நிர்வாகத்தினர் மீதும் அவதூறாக பேசி வருகின்றனர். நான் கோவில் நிர்வாகத்தில்  பொருளாளராக பணியாற்றி வருகிறேன்.       பாஜக மயிலாடி பேரூராட்சி கவுன்சிலர் சுதா சிவகணேசன் மயிலாடி புதூரில் செயல்பட்டு வரும் தேசிய குழந்தைகள் காப்பகத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் குழந்தைகள் வருகையை அதிகமாக காண்பித்து சரிவர பணிக்கு வராமலும் விடுமுறை எடுத்த நாட்களில் வேலை செய்த நாட்களாக காண்பித்து சம்பளம் வாங்கி வந்ததை அரசு அதிகாரிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்தோம். இதனையடுத்து புகாரின் அடிப்படையில் என்.ஜி.ஒ அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடந்தது.       விசாரணைக்கு பின் சுதா கணேசன் பணியில் இருந்து விலகினார். நான் புகார் அளித்த காரணத்தை முன் விரோதமாகக் கொண்டு என் மீதும் கோவில் நிர்வாகத்தினர் மீதும் அவதூறை பரப்பி வருகின்றார்.  மேலும் என்னை சரமாரியாக தாக்கியதில் காயம் அடைந்து ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். இந்நிலையில் நான் மருத்துவமனையில் இருப்பதை அறிந்து சிவ கணேசனின் மனைவி சுதா சிவகணேசன் போலீசில் புகார் அளித்துவிட்டு, என்னை தொலைத்து விடுவதாக மிரட்டல் விடுகிறார். எனவே பாஜக கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.
Next Story