கோவை: சாண்டா மராத்தான்- ஆயிரக்கணக்கான குழந்தைகள் உற்சாகம் !
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கோவை, சரவணம்பட்டி பகுதியில் உள்ள புரோசோன் நிறுவனம் சார்பில் நடைபெற்ற பலூன் ரன் 24 என்ற சாண்டா மராத்தான் போட்டியில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்றனர்.ஜும்பா நடனத்துடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில், 4 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். குழந்தைகளுடன் பெற்றோரும் கலந்து கொண்டு இந்த நிகழ்வை சிறப்பித்தனர்.போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் நேற்று பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், மொத்தம் 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டன.இந்த நிகழ்வு குழந்தைகளுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.
Next Story




