கனிமவளத்துறை துணை இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சிவ சேனா கட்சியினர் புகார்

புகார்
தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 39 கல்குவாரிகளில் அரசு அனுமதித்த அளவைவிட அளவுக்கு அதிகமான கிராவல், கற்கள் உள்ளிட்ட கனிம வளங்களை கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணை செய்த பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் கனிம வளங்களை கொள்ளையடித்த குவாரிகளின் உரிமையாளர்கள் 58 பேருக்கு 138 கோடி ரூபாய் அபராதம் விதித்திருந்தார் இந்த நிலையில் இந்த கல்குவாரிகள் எந்தவித தடையும் இன்றி தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், முறைகேடாக செயல்பட்ட குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய தேனி மாவட்ட ஆட்சியரிடம் சிவசேனா கட்சியினர் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர் இந்த நிலையில் தேனி மாவட்ட கனிமவளத்துறை துணை இயக்குனர் கிருஷ்ணமோகன் முறைகேடாக செயல்பட்ட கல்குவாரிகளை முறையாக ஆய்வு செய்திருந்தால் அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்காது என்றும் இவரின் அலட்சியப் போக்கால் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதால் குவாரிகள் செயல்பட துணை இயக்குனர் ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி தேனி மாவட்ட சிவசேனா கட்சியினர் கோரிக்கை வைத்தனர் கனிமவளத்துறை துணை இயக்குனரின் வங்கி கணக்கு மற்றும் அவர்களின் உறவினர்களின் வங்கி கணக்கு சொத்து விபரங்கள் ஆகியவற்றை சோதனை செய்ய வேண்டுமென சிவ சேனா கட்சியினர் தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தனர்
Next Story