பெண்கள் விடியல் சட்ட த்தின் கையில் என்ற தலைப்பில் சட்ட விழிப்புணர்வு முகாம்

X
அரியலூர் டிச.24- தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் ஆணைப்படியும் , அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி மலர் வாலண்டினா வழிகாட்டுதல் படி தனியார் (பாத்திமா) பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பாத்திமா சேரிட்டபுள் சொசைட்டியுடன் இணைந்து கிருஸ்துமஸ் விழாவை ஒட்டி, பெண்களின் விடியல் சட்ட த்தின் கையில் என்ற தலைப்பில் ஒரு சிறப்பு விழிப்புணர்வு முகாம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவர் மற்றும் சார்பு நீதிபதி முனைவர் லதா., தலைமையில் நடைபெற்றது. வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவர் மற்றும் சார்பு நீதிபதி தலைமை உரையில் ஆதியில் உலகை வடிநடத்திய தாய் வழி சமூகம் பின்னிட்ட காலங்களில் ஈராயிரம் ஆண்டுகளாக உரிமைகள் மறுக்கப்பட்டு அடிமைகளாக இருந்த வரலாறு கல்வியால் பகுத்தறிவு சிந்தனையால் கைவிலங்கு உடைப்பட்டுள்ளது.புதிய வானில் புதிய சிறகு முளைத்த பெண்களாய் சமூகத்தை வழிநடத்தும் பெண்களாக இருக்க வேண்டுமென்றால் சட்டத்தின் வலிமையும் சட்டத்தால் பெண்களுக்கு அளிக்கப்பட்ட உரிமையையும் பாதுகாப்பையும் அறிந்து கொள்வது அவசியம் .அறிவியலில் உச்சம் தொட்ட இந்த காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றன அறிவியல் ஊடகங்களில் பெண்களை பார்க்கும் பார்வையை மாற்ற வேண்டும் என்றால் பெண்களுக்கான மொழியை பெண்களுக்கான அரசியலை பெண்கள் பேச வேண்டும் . அதிகார பெண்கள் இடத்தில் சரியான அறிவியல் புரிதல் வேண்டும் . உண்மையான பெண் விடுதலை என்பது ஆண் பெண் பேதமின்றி சமத்துவ பார்வையை உணர செய்து ஆண்களோடு சரிநிகர் இணையாக கைகோர்த்து உலக வளர்ச்சிக்கு மறுமலர்ச்சிக்கு முன்னிருப்பதே வழிநடத்துவதேநமது கடமை என்பதை உணர்ந்து நாம் செயல்படுவோம் என்றும் கூறினார்.குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம், சட்டத்தில் பெண்கள் தங்களின் உரிமைகளை முழுமையாக பெறமுடியும் என்றும் விளக்கி கூறினார்.பணி செய்யும் இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையில் இருந்து பாதுகாப்பு சட்டத்தையும் , குழந்தை திருமண தடைச் சட்டத்தையும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடைச் சட்டத்தினையும் விளக்கி கூறினார். நீதிமன்றங்கள் சட்ட சேவையை தேசிய சட்ட பணிகள் குழு, மாநில சட்ட பணிகள் ஆணைக்குழு, மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு வட்ட சட்டப்பணிகள் குழு வின் மூலம் பெண்களுக்கு, வயதானவர்களுக்கு, மாற்று திறனாளிகளுக்கு, குழந்தைகளுக்கு ,பழஙகுடி இணைத்தவர்களுக்கு, சேவை செய்கிறது என்று விளக்கி கூறினார். மக்கள் நீதிமன்றங்களில் வழக்கை சுமூகமாக பேசி முடிக்கலாம். பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவி செய்கிறது.பொது பிரச்சினைகளுக்கும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சலுகைகளை பெற்று தரவும் நீதிமன்றங்கள் உதவுகிறது என்று விளக்கி கூறினார்.மேலும் நீதிமன்றகளும் காவல் துறையும் கோயிலுக்கு நிகரானது என்று விளக்கி கூறினார்.முதலில் அருட்சகோதரி சோபியா வரவேற்றார். ஜெயங்கொண்டம் மரைவட்ட முதன்மை குரு அருட் பணி பங்கு தந்தை ஜோஸப் கென்னடி சிறப்புரை ஆற்றினார்.வில்சன், வியாகுலம், அருட்சகோதரி பவுலின்மேரி ஆகியோர் வாழ்த்தி .இந்நிகழ்வில் வெண்புறா , முல்லை ,ரோஜா, வெண்தாமரை , தென்றல் , குறிஞ்சி , மரிக்கொழுந்து ,ஔவையார் , களஞ்சியம் , சங்குப்பூ போன்ற குழுக்களில் இருந்து பெண்கள் பங்கு பெற்றார்கள் . மாற்று திறனாளிகள், எச் ஐ வி நோயால் பாதிக்கப்பட்ட இருபால் மக்கள் , கணவரால் கைவிட பட்ட பெண்கள் , விதவைகள் ஆகியோரும் கலந்து கொண்டனர். பாத்திமா பள்ளியின் மாணவிகள் நடமாடியும், பாட்டு பாடியும் மக்களை மகிழ்வித்தார்கள். இக்கருத்தரங்கில் பங்கேற்ற பயனாளிகளுக்கு போர்வை, எவர் சில்வர் டப்பா, மளிகை பொருட்கள் ஆகியவை கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு பரிசாக பாத்திமா சேரிட்டபுள் சொசைட்டி யின் சார்பில் டாக்டர் வில்சன், வியாகுலம் அருட்சகோதரி பவுலின்மேரி, காவல் உதவி ஆய்வாளர் நந்தகுமார் ஆகியோர் வழங்கினார்கள். இறுதியில் அருட்சகோதரி ஜெசிந்தா நன்றியுரை கூறினார். அருட்சகோதரி யாழினி இந்நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளும் பாத்திமா சேரிட்டபுள் சொசைட்டியின் தலைவர் அருட்சகோதரி தாசில் மேரியின் வழிகாட்டுதல் படி செய்திருந்தார்கள்
Next Story

