கீழக்காவட்டாங்குறிச்சியில் அங்கன்வாடி மையம் திறப்பு

X
அரியலூர்,டிச.23 - அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில், சட்டப் பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா, அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்து, குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார். விழாவில், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயகுமாரி, ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி அசோகசக்கரவர்த்தி மற்றும் ஊராட்சித் தலைவர், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். :
Next Story

