மூன்று கிராமங்களில் முழுநேர நியாய விலைக் கடைகள் திறப்பு

மூன்று கிராமங்களில் முழுநேர நியாய விலைக் கடைகள் திறப்பு
X
மூன்று கிராமங்களில் முழுநேர நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டது.
அரியலூர், டிச.23 - அரியலூ மாவட்டம், ஏலாக்குறிச்சி, கரைவெட்டி, திருமானூர் காந்தி நகர் ஆகிய கிராமங்களில் புதிய முழு நேர நியாய விலைக் கடைகள் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.மேற்கண்ட கிராமங்களில் நடைபெற்ற விழாவில், கலந்து கொண்ட சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா, நியாய விலைக் கடைகளை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கினார்.விழாவில்,  கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட பதிவாளர் சாய்நந்தினி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயகுமாரி, ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி அசோகசக்கரவர்த்தி மற்றும் ஊராட்சித் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story