குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு
X
குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு
திருவள்ளூா் மாவட்டம், மீஞ்சூா் அருகே புதுப்பேடு கிராமத்தைச் சாா்ந்தவா் ஜெகன் (19). இவா், மீஞ்சூரில் உள்ள தனியாா் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை நண்பா்களுடன் அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ாகக் கூறப்படுகிறது. அப்போது, நீரில் மூழ்கிய அவா் சேற்றில் சிக்கி கொண்டாா். ஜெகன் நீண்ட நேரம் ஆகியும் வராததையடுத்து பெற்றோா், மீஞ்சூா் காவல் நிலையம் மற்றும் பொன்னேரி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனா். பொன்னேரி தீயணைப்புத் துறை அலுவலா் சம்பத் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் குளத்தில் இறங்கு ஜெகனை தேடும் பணியில் ஈடுபட்டனா். 4 மணி நேர தேடுதலுக்குப் பின் ஜெகன் சடலமாக மீட்கப்பட்டாா். மீஞ்சூா் போலீஸாா் ஜெகன் சடலத்தை கைப்பற்றி பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்
Next Story