மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம்

X
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் இன்று (23.12.2024) மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் முன்னிலையில், கண்காணிப்பு குழு தலைவரும், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினருமான கார்த்தி ப சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்திட்டம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு திட்டம், வேளாண் மற்றும் விவசாயிகளின் நலன், கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகள், சிறு குறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு, நிலம் மற்றும் கனிம வளங்கள், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான திட்டங்கள், கால்நடை மற்றும் பால்வள மேம்பாடு, 15-வது நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா, சமக்ர சிக்ஷா, தேசிய சமூக உதவித் திட்டம், பிரதம மந்திரி வேலை வாய்ப்புத் திட்டம், தீன்தயாள் - அந்தியோதயா யோஜனா, சத்துணவுத் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (கிராமம்), தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல் ஜீவன் மிஷன், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் அபிவிருத்தி திட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் பணியாளர்கள் விபரம் உள்ளிட்டவைகள் மற்றும் மேற்கண்ட துறைகள் சார்ந்த திட்ட செயல்பாடுகள் தொடர்பாகவும், மேற்கண்டவாறு ஒன்றிய, மாநில அரசின் பல்வேறு துறைகள் ரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அதன் பயன்கள், நிதிநிலை, மற்றும் செலவினங்கள் ஆகியன குறித்தும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியன குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில், கண்காணிப்பு குழு தலைவரான சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள், தங்களது துறைகள் ரீதியாக மேற்கொண்ட பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், தேவையான நிதி நிலைகள் ஆகியன தொடர்பாக ஆண்டறிக்கையின்படி, விரிவாக எடுத்துரைத்தனர். அதனைத்தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தில் ஒன்றிய அரசின் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் முழுமையாக நிறைவேற்ற ஒன்றிய அரசின் சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களை பரிந்துரை செய்து, தேவையான நிதி மற்றும் சலுகைகளை பெற்றுத் தருவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்துத்துறை அலுவலர்கள் முனைப்போடு செயல்பட வேண்டும் என கண்காணிப்பு குழு தலைவரான சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் இக்கூட்டத்தில் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தின் போது, வேளாண்மைத்துறையின் சார்பில் 03 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகளை கண்காணிப்பு குழு தலைவர்/பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இக்கூட்டத்தில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வானதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் கவிதப்பிரியா மற்றும் நகர் மன்றத்தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள், நகராட்சி ஆணையாளர்கள், அனைத்துத்துறை முதல்நிலை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

