சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு அலங்கார வழிபாடு

சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு அலங்கார வழிபாடு
தாடிக்கொம்பு சௌந்தரராஜா பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு அலங்கார வழிபாடு. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு சௌவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பரிவார மூர்த்தியாக உள்ள சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு இன்று தேய்பிறை அஷ்டமியையொட்டி ராஜ அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தாடிக்கொம்பு சௌவுந்தரராஜ பெருமாள் கோவில் பரிவார மூர்த்தியாக உள்ள சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு மாதம்தோறும் தேய்பிறை அஷ்டமியை யொட்டி சிறப்பு பூஜை பாலபிஷேகம் செய்வது வழக்கமான ஒன்று. இவருக்கு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தேய்பிறை அஷ்டமியான இன்று சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு பால், இளநீர், தேன், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனப் பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இன்று நடந்த தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். வழக்கத்திற்கு மாறாக கோயமுத்தூர், வெள்ளக்கோவில், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து அதிகமான பக்தர்கள் வருகை தந்து சொர்ண ஆகர்ஷண பைரவரின் ராஜ அலங்காரத்தை கண்டு மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
Next Story