பேருந்து மோதியதில் சாலையைக் கடக்க முயன்றவர் பலி.

பேருந்து மோதியதில் சாலையைக் கடக்க முயன்றவர் பலி.
பரமத்தி வேலூர் அருகே ஓவியம்பாளையத்தில் சாலையைக் கடக்க முயன்றவர் தனியார் பேருந்து மோதியதில் உயிரிழந்தார்.
பரமத்தி வேலூர், டிச. 23: பரமத்தி வேலூர் வட்டம், கொளக்காட்டுப்புதூர் அருகே உள்ள பூசாரிபாளையத்தைச் ប្រាក់ ៣ (70). விவசாயி. இவர் சனிக்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் நாமக்கல் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில், ஓவியம்பாளையம் பிரிவு சாலை அருகே கடக்க முயன்றார். அப்போது போது கரூரில் இருந்து நாமக்கல் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து அவரது இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த மணியை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை மணி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த பரமத்தி போலீஸார், மணியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story