மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Dindigul King 24x7 |23 Dec 2024 2:51 PM GMT
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி, தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 284 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். இன்றையதினம், புதியதாக பதிவு செய்யப்பட்ட ஊத்துப்பாறை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு, திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில் ரூ.1.25 இலட்சம் மதிப்பிலான கேன், பால் அளவை கருவிகள், பால் பரிசோதனை கருவிகள் மற்றும் பதிவேடுகள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு தையல் இயந்திரம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
Next Story