ஆண்டிபட்டியில் வட்டார நூலகத்தில் சட்ட வார விழா

ஆண்டிபட்டியில் வட்டார நூலகத்தில் சட்ட வார விழா
பட்டிமன்ற நடுவர் இளங்கோவன், முன்னால் யூனியன் ஆணையாளர் கோவிந்தராஜ். மற்றும் பலர் கலந்து கொள்ள உமா நாராயணன் பதிப்பகம் தலைவர் நேதாஜி சுபாஷ்சந்திர போசு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்
ஆண்டிபட்டியில் வட்டார நூலகத்தில் சட்ட வார விழா தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள வட்டார நூலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சி மொழிச் சட்ட வாரவிழா நிகழ்ச்சி தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் மூலம் எதிலும் தமிழ் எங்கும் தமிழ் என்பது குறித்து விழிப்புணர்வு உரை நிகழ்தப்பட்டது.. அப்போது மூத்த பத்திரிக்கையாளர் கவிஞர் சசிதுரை வந்திருந்தவர்களை வரவேற்றார். மேலும் வாழ்த்துறையினை முன்னால் தேனிமைய நூலகர் சந்திரசேகர் அவர் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். தேனி பொன்முடி தமிழின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார். நூலகர் கவிதா மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினார்கள். கருத்துரையினை தேனி வையைத் தமிழ்ச்சங்க நிறுவனர் புலவர் இளங்குமரன் கருத்தாழமுள்ள தமிழை சங்கால புறநானூரை மேற்கோள் காட்டிப்பேசினார். அவரது பேச்சில் முதிர்ச்சியும் எழுச்சியும் இருந்ததால் நூலகத்திற்கு அரசுத் தேர்வுக்கு படிக்க வந்திருந்த இளைஞர்கள் ஆர்வத்துடன் கேட்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இளங்கோ தலைமை உரையாற்றினார் .அப்போது மாணவர்களாகிய நீங்கள் தான் நாளைய நாட்டை வழிநடத்தக்கூடியவர்கள்.உங்கள் காதுகளில் ஒரு விடயத்தை போட்டு வைத்தால் தான் நாளைக்கு வேர்விட்டு செடியாகி மரமாகி, பூ பூத்து, தமிழ் மொழியை கனியாக அறுவடை செய்ய முடியும். ஆகவே தமிழுக்கு குந்தகம் விளைவிப்பவர்களை தட்டிக்கேளுங்கள் . ஒருவர் மாறினால் ஊர்மாற்றம் அடையும் . ஊர் மாறினால் தான் நாடுமாறும் என்று பேசினார். மேலும் இந்நிகழ்ச்சியில் வாசகர் வட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம் நன்றி தெரிவித்தார். பட்டிமன்ற நடுவர் இளங்கோவன், முன்னால் யூனியன் ஆணையாளர் கோவிந்தராஜ். மற்றும் பலர் கலந்து கொள்ள உமா நாராயணன் பதிப்பகம் தலைவர் நேதாஜி சுபாஷ்சந்திர போசு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Next Story