சிறையில் இருந்து குற்றவாளி தப்பி ஓட்டம் காவல்துறையினர் பணியிடை நீக்கம்
Tiruppur King 24x7 |23 Dec 2024 3:14 PM GMT
திருப்பூர் மாவட்ட சிறையில் கடந்த சனிக்கிழமை கைதி தப்பிய சம்பவம் தொடர்பாக, சிறையின் உதவி சிறை அலுவலர்கள் கங்காராஜன், சீதா, முதல்நிலைக் காவலர் ராஜபாண்டி, இரண்டாம் நிலை காவலர்கள் சக்திவேல், ரவிக்குமார் ஆகிய 5 பேரை பணியிடை நீக்கம் செய்து கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வழிப்பறி சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதி நகர் பகுதியை சேர்ந்த சூர்யா (24). நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்து முன்னணி நிர்வாகியிடம் நகை வழிப்பறி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, திருப்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்திருந்தார். இந்நிலையில் சனிக்கிழமை மாலை வழக்கம் போல வருகை பதிவினை (ரோல் கால்) சரிபார்க்கப்பட்ட போது சிறையில் ஒரு நபர் குறைவது தெரியவந்துள்ளது. உடனடியாக சிறைத்துறை போலீசார் அட்டவணையை சரிபார்த்தபோது சூர்யா இல்லாதது தெரியவந்தது. தொடர்ந்து சிறை முழுவதும் ஆய்வு செய்தபோது சிறையில் ஒரு புறத்தில் இருந்த இரும்பு வளை வழியே தப்பி சென்று இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் தப்பி ஓடிய நபர் குறித்த விவரங்களை போலீசார் சோதனை சாவடிகளுக்கும் , காவல் நிலையங்களுக்கும் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர் குறித்த புகைப்படம் மற்றும் அடையாளங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டும் தப்பியோடிய சூர்யா குறித்த தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது இந்நிலையில் கைதி தப்பிய சம்பவம் தொடர்பாக, சிறையின் உதவி சிறை அலுவலர்கள் கங்காராஜன், சீதா, முதல்நிலைக் காவலர் ராஜபாண்டி, இரண்டாம் நிலை காவலர்கள் சக்திவேல், ரவிக்குமார் ஆகிய 5 பேரை பணியிடை நீக்கம் செய்து கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
Next Story