பரமத்திவேலூரில் வாத்து கறிக்கடை தீப்பிடித்து எரிந்து சாம்பல்.

பரமத்திவேலூரில் வாத்து கறிக்கடை தீப்பிடித்து எரிந்து சாம்பல்.
பரமத்திவேலூரில் வாத்து கறிக்கடை தீப்பிடித்து எரிந்து சாம்பல் ஆனது.
பரமத்தி வேலூர்,டிச.23: பரமத்தி வேலூர்- கரூர் செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் அருகே வாத்து கறி கடை வைத்து நடத்தி வருபவர் வேலுசாமி (70). இவரது வாத்து கறி கடையில் அமைத்துள்ள கீற்று கொட்டகையில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதை பார்த்த அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர் . இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை .இதுகுறித்து வேலுசாமி வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று கீற்று கொட்டகையில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அனைத்து கட்டுப்படுத்தி அருகில் உள்ள குடிசைகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் கீற்றுக் கொட்டையில் இருந்த சாமான்கள் வாத்து கறி சமைப்பதற்கான பொருட்கள், துணிமனிகள் மற்றும் கீற்று கொட்டைக்குள் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பல் ஆனது.
Next Story