அதிக பால் வழங்கிய பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சிறப்பாக செயலாற்றிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்கள் ஆகியோர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய ஆட்சியர்

அதிக பால் வழங்கிய பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சிறப்பாக செயலாற்றிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்கள் ஆகியோர்களுக்கு   ஊக்கத்தொகை வழங்கிய ஆட்சியர்
அதிக பால் வழங்கிய பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சிறப்பாக செயலாற்றிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்கள் ஆகியோர்களுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு அதிக பால் வழங்கிய 3 பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சிறப்பாக செயலாற்றிய 3 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்கள் ஆகியோர்களுக்கு மொத்தம் ரூ.36,000/- மதிப்பில் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார். அதன்படி, திருவில்லிபுத்தூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு அதிக பால் வழங்கிய பால் உற்பத்தியாளரான திரு.இராதாகிருஷ்ணன் என்பவருக்கு முதல் பரிசாக ரூ.10,000-மும், இராஜபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு அதிக பால் வழங்கிய பால் உற்பத்தியாளரான திரு.ராம்கணேஷ் என்பவருக்கு இரண்டாம் பரிசாக ரூ.5000-மும், விருதுநகர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு அதிக பால் வழங்கிய பால் உற்பத்தியாளரான திரு.பன்னீர் என்பவருக்கு மூன்றாம் பரிசாக ரூ.3000-மும், சிறப்பாக செயலாற்றிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்களில் திருவில்லிபுத்தூர் சங்க செயலாளர் திரு.சிவனான் என்பவருக்கு முதல் பரிசாக ரூ.10,000-மும், கோபாலபுரம் சங்க செயலாளர் திரு.ரவிக்குமார் என்பவருக்கு இரண்டாம் பரிசாக ரூ.5,000-மும், திருச்சுழி சங்க செயலாளர் திரு.ஜெயச்சந்திரன் என்பவருக்கு மூன்றாம் பரிசாக ரூ.5,000-மும் என ஆக மொத்தம் ரூ.36,000/- மதிப்பில் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார்.
Next Story