விருதுநகர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன்  தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்; கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்கள். முன்னதாக, 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1.05 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.3.15 இலட்சம் மதிப்பில் மின்கலன் மூலம் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களையும், வெவ்வேறு விபத்துக்களில்(பாம்புக்கடி, கிணற்றில் தவறி விழுந்து, மின்சாரம் தாக்கி) மரணமடைந்த 3 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.3 இலட்சம் நிவாரணத் தொகைகளையும், என ஆக மொத்தம் ரூ.6.15 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
Next Story