அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அருந்ததியர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Virudhunagar King 24x7 |23 Dec 2024 3:39 PM GMT
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அருந்ததியர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பூவாணி கிராம பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அருந்ததியர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக திமுகவின் கூட்டணி கட்சியில் உள்ள மார்க்சிஸ்ட் மாசிஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூவாணி கிராமப் பகுதியில் அருந்ததியர் மக்கள் குடியிருப்பில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அருந்ததியர் மக்களுக்கு தேவையான சுகாதார வளாகம்,வருகால், சாலை வசதி, தெரு விளக்கு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பல முறை ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மனு கொடுத்த போதிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அருந்ததியர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் தங்கள் பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உடனடியாக செய்து தரக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஆண்கள்,பெண்கள் ஸ்டாலின் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக திமுகவின் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஈடுபட்டது திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story