அமைச்சரின் தலையிட்டதால் அடிப்படை வசதிகளுக்கான பணிகள் நிறுத்தப்பட்டதாக புகார்

அமைச்சரின் தலையிட்டதால் அடிப்படை வசதிகளுக்கான பணிகள் நிறுத்தப்பட்டதாக புகார்
அமைச்சரின் தலையிட்டதால் அடிப்படை வசதிகளுக்கான பணிகள் நிறுத்தப்பட்டதாக புகார்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சியில் தமிழக வருவாய்த்துறை அமைச்சரின் தலையீட்டால் நிறுத்தி வைக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளியை உடனடியாக நடத்தி பணிகளை தொடங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் வெம்பக் கோட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் ... விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சியில் 20 வார்டுகளை கொண்டது இந்த வார்டு முழுவதும் ஊராட்சி மன்ற பெருந்தலைவராக பஞ்சவர்ணம் உள்ளார் இந்த வார்டில் உள்ள 20 கவுன்சிலர்களும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் இந்த பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு 20 வார்டுகளுக்கும் 89 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைத்தல், கழிவு நீர், கால்வாய், குளியல் தொட்டி போன்ற பல்வேறு பணிகள் செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு விதிகள் ஒதுக்கப்பட்டதாகவும் இதற்கான ஒப்பந்தம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த நிலையில் இதற்கான ஒப்பந்தம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த நிலையில், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சரின் தலையீட்டால் அந்த ஒப்பந்தப்புள்ளி நிறுத்தப்பட்டதாகவும் இதனால் அடிப்படை வசதிகள் இல்லாமல் எங்கள் பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருவதாகவும், ஆகையால் தங்களுக்கு நிறுத்தப்பட்ட பணிகளை உடனடியாக நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் எனக் கூறி , விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதியைச் சார்ந்த 20 கவுன்சிலர்களும் இன்று மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை சந்தித்து மனு அளித்தனர் பேட்டி :ராம்ராஜ் - துணைத் தலைவர் (வெம்பக் கோட்டை ஊராட்சி)
Next Story