ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா் சங்கத்தின் மாவட்ட மாநாடு.

ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா் சங்கத்தின் மாவட்ட மாநாடு.
திரளான சங்க நிர்வாகிகள் பங்கேற்பு.
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட மாநாடு நடைபெற்றது. திருவண்ணாமலை சத்திரம் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டுக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளா் லட்சுமணன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் முருகையன் வரவேற்றாா். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் கிருஷ்ணசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசுகையில், அனைத்து வட்டார ஒருங்கிணைப்பாளா்களுக்கு விபத்துக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, குழு நல நிதி ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.
Next Story