விருத்தாசலம் அருகே ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் மாயம்
Virudhachalam King 24x7 |23 Dec 2024 6:11 PM GMT
இரண்டாவது நாளாக தேடும் பணி தீவிரம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள மோசட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் (40), விவசாயி. மனைவி சரஸ்வதி. இவரும் இவரது மகன்கள் சந்துரு (10), சித்தார்த் (6), ஆகிய இருவருடன் சரஸ்வதி குளிக்க சென்றார். அப்போது சந்துருவும் சித்தார்த்தும் ஓடி சென்று ஆற்றில் இறங்கினர். ஆற்றில் தண்ணீர் ஓட்டம் அதிகமாக இருந்ததாலும் ஆழம் அதிகமாக இருந்ததாலும் சந்துரு, சித்தார்த் இருவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் சரஸ்வதி ஓடிச் சென்று ஆற்றில் இறங்கி சித்தார்த்தை மீட்டார். அதற்குள் தாயின் கண் முன்னே சந்துரு தண்ணீரில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டான். தன் மகன் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவதை கண்டு தாய் கதறி அழ அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து ஆற்றில் இறங்கி தேடினர் . மேலும் தகவல் கிடைத்து விரைந்து வந்த விருத்தாசலம் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாரும் சந்துருவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் ஆற்றில் இறங்கி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
Next Story